Latestசினிமா

போலீசில் சிக்கி தர்ம அடி வாங்கிய யோகிபாபு!

சென்னை, ஜன.29- சென்னையில் மர்ம ஆசாமி அரங்கேற்றி வந்த நாச வேலையால், சில வருடங்களுக்கு முன், நடு இரவில் போலீசில் வசமாக சிக்கி, யோகிபாபு தர்மடி வாங்கிய சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்s சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் யோகிபாபு. இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மட்டும் அல்ல பிரபலங்களையும் கவர்ந்து விட்டது.

இந்நிலையில் இவர் போலீசில் சிக்கி அடிவாங்கிய சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த போது, ஒரு சில நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு முறை நாடகம் முடிந்து நள்ளிரவு வேளையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

அந்தக் காலக் கட்டத்தில்  சென்னையில், மர்ம ஆசாமி ஒருவர் பைக் மற்றும் கார்களுக்கு பெட்ரோல் ஊத்தி நெருப்பு வைத்து எரித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இதனால் ஒரு வேளை இந்த ஆசாமி யோகிபாபுவாக இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரித்துள்ளனர்.  விசாரணையில் தாறுமாறாக போலீஸ்காரர்களால் அவர் அடிக்கப்பட்டார்.

நாடகத்தில் நடித்து விட்டுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய பின்னரே யோகிபாபுவை போலீசார் விடுவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker