Latestவிளையாட்டு

அர்சனல் வீரர் பற்றி நிறவெறிப் பேச்சு: மன்னிப்புக் கேட்டார் இஷா குப்தா!

மும்பை, ஜன.30 பிரபுதேவா- தமன்னா நடித்த ‘தேவி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் பாலிவுட் நடிகை இஷா குப்தா. இவர் இங்கிலாந்து கால்பந்து பிரிமியர் லீக்கில் விளையாடும் அர்சனல் அணியின் இந்திய தூதராக இருந்து வருகிறார்.

அர்சனல் அணியின் விளையாட்டை பார்த்தவாறு கைத்தொலை பேசியில் தனது நண்பருடன் ‘சேட்டிங்’ செய்திருக்கிறார். அப்போது அந்த அணியில் விளையாடும் நைஜீரிய வீரர் இவோபியின் மோசமான விளையாட்டை விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது இஷா குப்தாவின் நண்பர் இவோபி, கொரில்லா போன்று மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையாமல் இருப்பதாக விமர்சித்துள்ளார்.

அதையடுத்து இஷா குப்தா, ஆமாம் அவரை ஏன் இந்த போட்டியில் விளையாட வைக்கிறார்கள் என்று தெரியவில்லை என நண்பருக்கு பதிலளித்துள்ளார்.

அதோடு அப்படி நண்பருடன் சேட்டிங் செய்ததை புகைப்படமெடுத்து அதை தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார் இஷா குப்தா.

அதைப் பார்த்த வலைவாசிகள், கறுப்பு இனத்தவர் ஒருவரை கொரில்லா என்று விமர்சிப்பது நிற வெறிவை காட்டுகிறது என்று இஷா குப்தாவை கடுமையான வார்த்தைகளில் கண்டித்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இஷா குப்தா “நான் பேசியது நிறவெறி பிடித்த பேச்சு என்று எனக்கு தெரியாது என்று சொல்லி பேசியதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker