Latestஉலகம்

ஒரு தீவின் கடைசி அபூர்வ வாத்து: நாய்கள் கடித்துக் கொன்ற சோகம்!

சிட்னி, ஜன.30- தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள நியூவே தீவில் தன்னந்தனியாக வாழ்ந்து வந்த மல்லார்ட் இனத்தைச் சேர்ந்த ஒரேயொரு ஆண் வாத்தும் கொல்லப்பட்டு விட்டது.

உலகில் அபூர்வ இனமாக கருதப்படும் மல்லார்ட் இன வாத்துக்களில் ஒன்றான இந்த ஆண் வாத்தை நாய்கள் கடித்து குதறிக் கொன்று விட்டதாக தெரிய வந்தது.

இந்தத் தீவை பொறுத்தவரையில் ஒரேயொரு வாத்து மட்டுமே வாழ்ந்து வந்தது. இது எப்படி இங்கு வந்தது என்று தெரியவில்லை. எனினும், வெகு தொலைவிலுள்ள வேறு தீவுப் பகுதிகளில் இருந்து புயலினால் அடித்து வரப்பட்டு இந்தத் தீவுக்கு அது வந்து சேர்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர், அந்த ஆண் வாத்தைப் புகைப்படம் எடுத்து, உலகில் தன்னந்தனியாக வாழும் வாத்து என்ற தலைப்பில் இதைப் பற்றி எழுதியிருந்தார். அதன் பின்னரே பலரும் அறிய நேர்ந்தது.

இந்நிலையில் அந்த வாத்தும் கொல்லப்பட்டு விட்டது. சில தினங்களுக்கு முன் புதர் ஒன்றில் நாய்களால் கடிக்கப்பட்டு வாத்து செத்துக் கிடந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

இந்தத் தீவில் ஆறுகளோ, குளங்களோ இல்லாத நிலையில் இந்த வாத்து வாழ்க்கை என்பது மிக கடினமாகி விட்டது. அதன் சிரமத்தைக் குறைப்பதற்காக இங்குள்ள தீயணைப்பு நிலையத்தினர், அவ்வப்போது வரண்டு போகும் சிறிய குட்டையில் நீர் ஊற்றி வாத்துக்கு வசதி செய்து தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker