Latestசினிமா

கார்த்திக் சுப்புராஜூக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி!

சென்னை,ஜன.30- ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜூவை அழைத்த ரஜினி, மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்து uள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பேட்ட படத்தில் ரஜினியை பார்த்த அத்தனை பேரும் ‘ரஜினியின் பழைய துள்ளலை அப்படியே கொண்டு வந்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ்’ என்று ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

இந்தப்படத்தில் ரஜினியின் தோற்றத்தையும் இளமையையும் மீட்டுக் கொண்டு வந்து இருந்தார் கார்த்திக். ‘காலா’, ‘கபாலி’யோடு இப்படத்தை இணைத்துப் பேச ஆரம்பித்த ரசிகர்கள் ‘எங்க தலைவரை அசிங்கப்படுத்திய பா. ரஞ்சித் , இந்தப் படத்தை பார்த்தாவது தன்னைத் திருத்திக்கணும் என்கிற அளவுக்கு விமர்சனத்தில் இறங்கி விட்டார்கள்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜை அழைத்து நன்றி கூறிய ரஜினி, “விரைவில் இன்னொரு படத்திற்கு தயாராகுங்க” என்று கூறியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜூ.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker