Latestமலேசியா

கிள்ளான் ஆற்றிலிருந்து அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

கோலாலம்பூர்,ஜன.30- அக்லே (AKLEH) நெடுஞ்சாலை அருகே ஓடும் கிள்ளான் ஆற்றில் அழுகிய நிலையில் ஓர் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது.

இன்று நண்பகல் 12 மணி அளவில் ஆற்றில் மிந்தது கொண்டிருந்த அச்சடலத்தை ஆடவர் ஒருவர் பார்த்து தங்களுக்கு தகவல் அளித்ததாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் ஷாஹாருடின் அப்துல்லா தெரிவித்தார்.

முழுவதும் அழுகியவாறு இருந்த அந்த உடல் யாருடையது என்று தெரியவில்லை. அவர் 3-லிருந்து 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், உடல் அழுகிப் போய்விட்டதால் உடலில் ஏதும் காயங்கள் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அதனால், சம்பந்தப்பட்ட ஆடவரின் உடல் சவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவொரு திடீர் மரணம் என்று இப்போதைக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தால் 03-2115 9999 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker