Latestமலேசியா

செமினி இடைத்தேர்தல்; இன அரசியலை நடத்த மாட்டோம்! -அன்வார்

கோலாலம்பூர், ஜன.30- மார்சு மாதம் 2-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் செமினி தொகுதிக்கான இடைத் தேர்தலில் வெற்றியை நிலைநாட்டுவதற்காக, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இன அரசியலை பயன்படுத்தாது என்று பிகேஆர் கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கேமரன் மலைத் தொகுதிக்கான இடைத் தேர்தலின் போது, அப்பகுதி வாழ் மக்களின் ஆதரவை தங்களின் வசப் படுத்தும் நோக்கில் தேசிய முன்னணி கூட்டணி இன அரசியலை பயன்படுத்தியதை போன்று, செமினி தொகுதிக்கான இடைத் தேர்தலின் போதும் அக்கூட்டணி அதேப் போன்று செயல்படும் வாய்ப்பு உண்டு என்பதை அவர் மறுக்கவில்லை.

இருந்த போதிலும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், இன அரசியலை பயன்படுத்தாது என்றும், நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய கொள்கையை கொண்டு தான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி செயல்படும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

“முறையான கொள்கையை கொண்டு, மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி, அத்தொகுதியை மீண்டும் வெல்ல பக்காத்தான் பாடுபடும்.

“இன அரசியல் வாயிலாக தான் சில தொகுதிகளை வெல்ல முடியும் என்று சிலர் கருதும் வேளையில், முறையான கொள்கைகள் மற்றும் அதனால் ஏற்படக் கூடிய மேம்பாடுகளை கருத்தில் கொண்டு தான் ஒரு தொகுதியில் நாம் வெற்றிப் பெற முடியும் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் அன்வார் சொன்னார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker