Latestமலேசியா

ஜேபி செண்ட்ரலில் ஆடவர் தற்கொலை முயற்சி!

ஜொகூர் பாரு,ஜன.30- கடும் போதையில் ஆடவர் ஒருவர் ஜேபி செண்ட்ரல் கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் இன்று காலை 8.30 மணிக்கு நிகழ்ந்தது.

இது குறித்து புகார் பெறப்பட்டதும் போலீசாரும் தீயணைப்பு-மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜொகூர் பாரு சவூத் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாஹுரினாய்ன் ஜாயிஸ் தெரிவித்தார்.

அந்த ஆடவரை சமாதனப்படுத்தி தற்கொலை முயற்சியிலிருந்து தடுக்கவே அவர்களுக்கு அரை மணி நேரம் பிடித்துள்ளது. எப்படியோ ஒரு வழியாக சமாதானமாகி இருக்கிறார் அந்த 39 வயது ஆடவர்.

அவர் சிலாங்கூரை சேர்ந்தவர். சம்பவத்தின்போது அவர் ஒரு நிலையில் என்றும் அவர் உளறிக் கொண்டேதான் இருந்தார் என்றும் ஷாஹுரினாய்ன் கூறினார்.

அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பில் 9 குற்றப்பதிவுகள் இருந்திருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker