Latestமலேசியா

தம்பியை விடுவிக்க அண்ணனை மிரட்டும் போலீஸ்காரர்!- (video)

தடுப்புக்காவலில் இருக்கும் தம்பியை விடுவிக்க அண்ணனிடம் போலீஸ்காரர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜொகூர் போலீஸ் அறிவித்துள்ளது.

அந்தக் காணொளியில், போலீஸ்காரர் ஒருவர் தனது இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியைக் காட்டி, காரில் இருக்கும் ஆடவரை மிரட்டும் காட்சி டம் பெற்றுள்ளது.

மேலும், இந்தியர்களை இழிவுப்படுத்தும் வகையில் அந்த போலீஸ்காரர் அந்தக்  காணொளியில் பேசியுள்ளார்.

காணொளி  உரையாடலின்படி, காரில் அமர்ந்திருக்கும் ஆடவர் ஒருவர்,  தடுப்புக்காவலில் இருக்கும் தனது தம்பியை விடுவிக்க 50,000 ரிங்கிட் பணம் தர ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடம்  20,000 ரிங்கிட் மட்டுமே வழங்கியுள்ள நிலையில், மீதிப் பணத்தைக் கொடுக்குமாறு  அந்தப் போலீஸ்காரர் மிரட்டுவதை அந்தக் காணொளி உரையாடல் காட்டுகிறது.

மீதிப்பணத்தை தராவிடில், தடுப்புக் காவலில் இருக்கும் தம்பியை கொன்று விடுவோம் என்று அந்த போலீஸ்காரர் மிரட்டுவதும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.

அரச மலேசிய போலீஸ் படைக்கு, குறிப்பாக ஜொகூர் போலீசுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் மீது போலீஸ் தீவிர விசாரணை நடத்தும் என்று ஜொகூர் போலீஸ் துணைத் தலைவர் முகமட் கமாரூடின் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker