Latestமலேசியா

பினாங்கு ஹோட்டல் அறையில் அமெரிக்க ஆடவரின் சடலம் மீட்பு!

ஜோர்ஜ் டவுன்,ஜன.30- ஜாலான் பினாங்கிலுள்ள ஒரு ஹோட்டல் அறையில் அமெரிக்க ஆடவர் ஒருவர் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.

67 வயது ஜேம்ஸ் எட்வர்ட் மெஹணி என்ற அவ்வாடவர் கட்டில் மீது சுயநினைவின்றி கிடந்ததை ஹோட்டல் ஊழியர் ஒருவர் காலை 11 மணிக்கு பார்த்திருக்கிறார்.

அவர் நேற்றிலிருந்து அந்த ஹோட்டலில் அறையில் தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக தீமோர் லாவூட் மாவட்ட போலீஸ் தலைவர் சே சைமானி சே ஆவாங் தெரிவித்தார்.

இன்று காலையில், ஹோட்டல் ஊழியர் அந்த அமெரிக்கர் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்யச் சென்றிருக்கிறார். அந்த அமெரிக்கர் சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

ஹோட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு அழைத்தனர். ஆம்புலன்டில் வந்த மருத்துவ உதவியாளர்கள் அந்த அமெரிக்கரை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தினர். அதையடுத்து, அவரது சடலம் சவப்பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

பின்னர், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker