Latestமலேசியா

அந்நிய தொழிலாளர் நிர்வாக முறை மறுபரிசீலனை; காலம் கடத்தாதீர்! -அரசுக்கு கோரிக்கை

கோலாலம்பூர், பிப்.1 – அமைப்பில் உள்ள அந்நிய தொழிலாளர்களின் பெர்மிட்டுகளை புதுப்பிக்கும் செயல் முறையில் எவ்வித பாதிப்பும் நேரக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அந்நிய தொழிலாளர் நிர்வகிப்பு செயல் திட்டத்தை கூடிய விரைவில் மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கையில் எடுத்த நாள் முதற்கொண்டு, அந்நிய தொழிலாளர்களின் வேலை பெர்மிட்டுகளை புதுப்பிப்பதில் கால தாம் ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டி, குடிநுழைவு இலாகாவின் முன்னாள் அமலாக்கத் தலைவர் இஷாக் முகமட் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.

அந்நிய தொழிலாளர்கள் நிர்வகிப்பு செயல் திட்டம் அல்லது கொள்கை முறையை மறுபரிசீலனை செய்யும் பொறுப்பை அரசாங்கம் சுயாதீன குழு ஒன்றிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் முதற்கொண்டு அந்நிய தொழிலாளர்களின் பெர்மிட்டுகள் புதுப்பிக்கப் படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“அரசாங்கத்தின் எண்ணம் நன்மையளிக்கும் வகையில் இருந்த போதிலும், அதனை செயல்படுத்துவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு கால தாமதம் ஏற்படுவதால், அந்நிய தொழிலாளர்களுக்கும், அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள முதலாளிகளுக்கும் தாம் பாதகம் ஏற்படுகிறது” என்று அவர் சொன்னார்.

இருந்த போதிலும், வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ள அந்நிய தொழிலாளர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் ஏற்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

“வீட்டுப் பணிப்பெண்களின் வேலை பெர்மிட்டுகளை புதுப்பிக்க இணைய அமைப்பு முறை உள்ளதால், அவர்களுக்கு அப்பிரச்சனைகள் ஏற்படுவதில்லை” என்று அவர் கூறினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker