Latestஇந்தியா

காந்தி உருவத்தைச் சுட்ட பெண்: நாடெங்கும் வலுக்கும் எதிர்ப்பு – Video

அலிகார், பிப்.1- நாடு முழுவதும் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சகுன் பாண்டே என்ற பெண், மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இச்சம்பவம் உத்தரபிரதேசம், அலிகாரில் இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் நடந்தது.

பூஜா சகுன் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டு நின்ற அவர் அகில பாரதிய இந்து மகா சபாவின் நீதிபதியாக பதவி வகிக்கிறார்.

இச்சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இதில் தொடர்புடைய 13 பேர் மீது அலிகார் போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்கள் தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்து மகா சபையின் செயல், வன்முறையைத் தூண்டி உள்ளது.  இது ஒரு பயங்கரவாத செயல் ஆகும். எனவே இச்சம்பவத்தில் ஈடுபட்ட பூஜா சகுன் பாண்டே உள்ளிட்டவர்கள்  பயங்கரவாதக் கும்பலை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்ய வேண்டும் என பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker