Latestமலேசியா

குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்!

கிள்ளான்,பிப்.01- செந்தோசா, பண்டார் புத்ரியில் உள்ள குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.

நேற்று மாலை 4.50 மணி அளவில் தனது இரு நண்பர்களுடன் தான் வேய் சியாங் விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தினுள் தவறி விழுந்திருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து மாலை 4.57 மணிக்கு தகவல் கிடைத்ததாக ஶ்ரீ அண்டாலாஸ் தீயணைப்பு, மீட்புத் துறைத் தலைவர் ரோம்ஸி அபு தெரிவித்தார்.

குளம் அவ்வளவாக ஆழமாக இல்லாவிட்டாலும் அதன் நீரோட்டம் மிக வேகமாக இருந்ததால், மீட்புப் படையினரால் தான் வேய் சியாங்கை விரைந்து தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாலை 6.59 மணி அளவில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker