Latestசினிமா

கேரளாவில் தமிழ்ப் படங்களுக்கு ‘வெச்சிட்டாங்கய்யா’ வேட்டு!

திருவனந்தபுரம், பிப்.1- கேரளாவில் தமிழ்ப் படங்கள் வெளியானால் கேரளா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரள அதிரடியான நடவடிக்கையில் இறங்கியது.

தமிழ் முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், ரஜினி, அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உண்டு. இதனால் அங்கு தமிழ்ப் படங்கள் வெளியானால் கேரளா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனை குறி வைத்து தற்போது புதிய முறையொன்று அமல்படுத்தப் படவுள்ளது. அதாவது தமிழில் வெளியாகும் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மலையாள படங்களை விட அதிகமான வரவேற்பு ரசிகர்களிடமும் தியேட்டர் அதிபர்களிடமும் இருந்து வருகிறது.

இது மலையாள திரையுலகில், வெளியாகும் படங்களின் வசூலை அதிகம் பாதித்து வருவதாக தொடர்ந்து தயாரிப்பாளர்களிடம் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனால் கேரள திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்கம், தமிழ்ப்படங்களை கேரளாவில் வெளியிடுவதற்கு புதிய கட்டுபாடுகளை அமல்படுத்தவுள்ளனர்.

இனி தமிழ்ப்படம் கேரளாவில் அதிகபட்சம் 125 தியேட்டர்களில் மட்டுமே வெளியாக முடியும் எனவும் அதேபோல் மலையாளத்தில் வெளியாகும் படங்கள் 160 -லிருந்து 170 தியேட்டர்கள் வரை திரையிட செய்ய முடியும் எனக் கூறியுள்ளனர்.

மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு மட்டும் விதிவிலக்காக அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்கிற முடிவை அமல் படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker