Latestமலேசியா

சீனப் புத்தாண்டு: பேருந்து- ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

கோலாலம்பூர்,பிப்.01- சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கிழக்குக்கரை மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுக்குமான பேருந்து டிக்கெட்டுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே விற்று தீர்ந்து விட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

டிபிஎஸ் (TBS) பேருந்து நிலையத்தில் பெர்னாமா மேற்கொண்ட கண்ணொட்டத்தின்படி, ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரைக்கும் மற்றும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரைக்கும், கோலாலம்பூரில் இருந்து கோத்தா பாருவுக்கும் கோலத்திரங்கானுவுக்கும் செல்லும் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகள் விற்று முடிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

அதோடு, கோலாலம்பூரிலிருந்து பினாங்கு, கெடா ஆகிய வட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்து டிக்கெட்டுகளும் 80 விழுக்காட்டுக்கும் மேல் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மாறாக, மலாக்கா, ஜொகூர், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு இந்த சீனப் புத்தாண்டு விடுமுறையில் செல்ல விரும்புவோருக்கு இன்னும் டிக்கெட்டுகள் இருப்பதாக TBS பணியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, கேஎல் செண்ட்ரலில் இருந்து கிழக்குக்கரை மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் செல்லும் கேடிஎம் ரயில் டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker