Latestவாழ்க்கை

நாளை சனி மகாபிரதோஷம்! “சிவாய நம” ஓதி வழிபடுக!

கோலாலம்பூர், பிப்.1-நாளை சனிக்கிழமை சனி மகா பிரதோஷம் வருகிறது சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனால் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்தத் திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் மகா சனிப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.

அதன்படி நாளை 2.2.2019 மகா சனிப் பிரதோஷம் வருகிறது.  பிரதோஷ நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபடலாம்.

அன்று முமுவதும் விரதமிருந்து உபவாசம் இருந்து திருமுறை வாசிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று ஐந்தெழுத்தை “சிவாய நம” ஓதி வழிபடவேண்டும்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப்பிரதோஷம்” சிறப்பானதென கூறப்படுகிறது. அது கிருஷ்ணப்பட்சத்தில் (தேய்பிறை) சனிக்கிழமையில் வந்தால் மகாப் பிரதோஷம் என்று கூறப்படுகிறது.

சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும் சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker