Latestமலேசியா

முன்னாள் தேர்தல் ஆணையத்தினர் மீது வழக்கு; பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்குமா?

கோலாலம்பூர், பிப்.1- தேர்தல்களின்போது பல்வேறான தவறுகளை இழைத்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள வேளையில், அந்த வழக்கின் முடிவு எவ்வாறு அமைந்தாலும், உடனடியாக 15-ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பொதுத்தேர்தலின் முடிவை மனு விண்ணப்பம் வாயிலாக தான் எதிர்க்க முடியும் என்றும், அந்த மனுவை சமர்ப்பிக்கும் காலம் கடந்து விட்டதாக இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளர் ஷாரெட்ஸான் ஜோஹான் கூறினார்.

“தேர்தல் முடிவை எதிர்க்க தேர்தல் மனு விண்ணப்பம் தொடுக்கப் பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த மனு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் குற்றங்கள் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது” என்று அவர் விவரித்தார்.

“அதன் அடிப்படையில், தேர்தல் முடிவை மாற்றும் காலம் கடந்து விட்டது” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் பலர் தங்களின் வேலைகளை ராஜினாமா செய்து விட்டதால், அவர்கள் மீது தொடங்கப் பட்டுள்ள விசாரணைகள் வெறும் அறிவு சார்ந்த விசாரணையாக அமையும் என்று சட்டத்துறை அலுவலகத்தால் நியமிக்கப் பட்ட வழக்கறிஞர் கூறியதை தொடர்ந்து, பலர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

அந்த வழக்கு விசாரணை வாயிலாக என்ன கண்டறியப் பட்டாலும், ராஜினாமா செய்த அந்தத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மீது வழக்கு தொடங்கப் பட வேண்டும் என்று ஷாரெட்ஸான் கேட்டுக் கொண்டார்.

“அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் அவ்வாறு தப்பித்துச் செல்ல வாய்ப்பு வழங்கக் கூடாது” என்று அவர் நினைவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker