Latestஉலகம்

விண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப்பெண்!

லண்டன், பிப்.1- பிரிட்டனில் வசிக்கும் ஈழத் தமிழ் மாணவி ஒருவர் அனைத்துலக விண்கலத்தில் செல்லவிருக்கிறார்.  பிரிட்டனில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே விண்வெளி தொடர்பாக கல்வியில் சிறப்பு தேர்வு பெற்று பயிற்சிக்காக விண்வெளி ஓடத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

பிரிட்டனில் சுமார் 30ஆயிரம் மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றனர். செயற்கைக் கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் நில அளவை செய்வது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயின்று வருகின்றனர்.

இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு எடுத்திருக்கிறது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஈழத் தமிழ் மாணவி சியோபன் ஞானகுலேந்திரன்.

இவர் நுண்ணியல் உயிர்களைப் பற்றிய கல்வியில் சிறப்பு தேர்வு பெற்றுள்ளார். அதோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.  இவரைப் போலவே இங்கிலாந்து மாணவி டயானாவும் இவரும் அனைத்துலக விண்கலத்தில் அனுப்பப்பட்டு நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர். ஆகையால் தமிழ் மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker