Latestசினிமா

43 வயதில் திருமணமின்றி தாயான பிரபல பட அதிபர்!

மும்பை, பிப்.1- பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர். இவர் வாடகைத் தாய் மூலம் தனது 43 வயதில் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

இந்தியாவில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களைth தயாரித்து வருபவர் ஏக்தா கபூர். பிரபல பாலிவுட் நடிகர் ஜித்ரேந்திராவின் மகளான இவருக்கு, இன்னும் திருமணமாகவில்லை.

மேலும் திருமணம் செய்து கொள்ளும் யோசனையும் இவருக்கு இல்லை என்று கூறப்படுகிறது. இவரது தம்பியும் நடிகருமான துஷார் கபூருக்கும் திருமணமாகாத நிலையில் வாடகைத்தாய் மூலமாக தந்தையானார். இதனால் இவருக்கு லக்சாயா என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் ஒரு குழந்தைக்கு தாயாகும் ஆசை ஏக்தா கபூருக்கு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வாடகைத் தாய் மூலமாக குழந்தையைப் பெற அவர் முடிவு செய்தார்.

கடந்த 27 ஆம் தேதி வாடகைத் தாய் மூலமாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஒரு குழந்தைக்கு தாயான ஏக்தா கபூருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் பிரபலங்களான அமீர்கான், ஷாருக்கான், இயக்குநர் கரண் ஜோஹார்,நடிகை சன்னி லியோன் ஆகியோரும் வாடகைத் தாய் மூலமாக பெற்றோர் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker