உலகம்

ஆப்டவுன் பூச்சோங் பெர்மாயில் 200 கடைகள் தீக்கிரை!- (video)

பூச்சோங்,பிப்.2- ஆப்டவுன் பூச்சோங் பெர்மாயில் உள்ள கிட்டத்தட்ட 200 கடைகள் தீக்கிரையாகிய சம்பவம் இன்று காலை 7.50 மணி அளவில் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு காலை 7.58 மணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை அமலாக்கப் பிரிவின் துணை இயக்குநர் நோரிஸாம் முகமட் நுடின் தெரிவித்தார்.

2 மணி நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Uptown Puchong Permai

雪州 浦种柏迈 Uptown Puchong Permai 行情不好特别多火灾!!!保险公司,自己看着办吧。。。

Posted by 509的改变 on Friday, 1 February 2019

தீக்கிரையாகிய அந்த 200 கடைகளில் 80 கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்ததாகவும், இவ்விபத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவிலொலை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்திற்கான காரணமும் இழப்பும் ஆராயப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker