Latestசினிமா

சிம்பு என்றால் விட்டு விடுவோமா? ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்டகாசம் தொடர்கிறது!

சென்னை, பிப்.2- சிம்புவின் “வந்தா ராஜாவாத்தான் வருவேன்” படத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ். சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தமிழகம் முழுவதும்’வந்தா, ராஜவாகத்தான் வருவேன்’ படம் வெளியானது .

ரம்யா கிருஷ்ணன், பிரபு நாசர், கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் மற்றும் மகத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் வெளியாகியுள்ளது. சிம்பு ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு பால் தானமாக தந்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கும் படக் குழுவிற்கும் அதிர்ச்சி தரும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ். தற்போது அந்தப் பட்டியலில் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படமும் இணைந்துள்ளது.

—————————–

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker