Latestமலேசியா

5 வயது மகனை துணி மாட்டும் கம்பியால் மோசமாக அடித்த தந்தை!

கூலிம்,பிப்.2- 5 வயது மகனை அடித்து சித்ரவதை செய்ததாக நம்பப்படும் 35 வயது ஆடவன் கூலீம் ஹைதெக் பார்க்கிலுள்ள வீடொன்றில் நேற்று கைது செய்யப்பட்டான்.

சம்பந்தப்ப சிறுவனின் பாலர் பள்ளி ஆசிரியை ஒருவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து அவ்வாடவன் கைதானான்.

பாலர் பள்ளிக்கு வந்த சிறுவன் எப்போதும் போல் இல்லாமல் சுணங்கி உட்கார்ந்திருக்கிறான். சிறுவன் ஏன் அவ்வாறு இருக்கிறான் என்று அருகே சென்று பார்த்த ஆசிரியை அவனது முகத்திலும் உடற்பகுதிகளிலும் இருந்த காயத் தழும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

முதலில் அமைதியாக இருந்த சிறுவன் பின்னர் ஆசிரியையிடம் தனது தந்தை தன்னை அடித்ததாக கூறியிருக்கிறான்.

அதை அடுத்து, போலீசில் புகார் செய்தது மட்டுமின்றி சிறுவனை அந்த ஆசிரியை உடனடியாக கூலிம் மருத்துவமனைக்கு சிகிசைக்காக கொண்டு சென்றிருகிறார்.

தனது பேச்சை கேட்காமல் அடம் பிடித்ததால், தனது மகனை துணி மாட்டும் பிளாஸ்டிக் கம்பியால் அடித்ததாக அந்த ஆடவன் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்ட வேளை, பின்னர் அவன் போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker