Latestஉலகம்

இஸ்ரேலைக் குறிவைக்கும் ஏவுகணை சோதனையில் வெற்றி! – ஈரான்

தெஹ்ரான், பிப்.3- ஆயிரத்து 350 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்துச் சென்று தாக்கக் கூடிய, குறிப்பாக, இஸ்ரேலைக் குறிவைக்கக் கூடிய வகையில் அதி நவீன ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான்.

அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறையின் சார்பில் நிர்ப்பந்திக்கப் படுகிறது.

இந்நிலையில், எதிரி நாடானா இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் அதிக தூரம் செல்லும் ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருகிறது.

அவ்வகையில், 1,350 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்துச் சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக பமுடித்திருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

“ஹோவைஸே” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, திட்டமிட்ட தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ஈரான் இராணுவ அமைச்சர் அமிர் ஹட்டாமி தெரிவித்தார்.

தாழ்வாகவும் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை மிகக் குறைவான நேரத்தில் தாக்குதலுக்கு தயார் படுத்தி விடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker