Latestமலேசியா

சந்தோச சிங்கத்தின் ரொக்கம்- நகைகள் அவரிடமே ஒப்படைப்பு! ஜொகூர் போலீஸ்

ஜொகூர்பாரு, பிப்.3- மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை அவரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டதைத் தொடர்ந்து அவற்றை ஜொகூர் மாநில போல்சார் விரைவில் ஒப்படைப்பர்.

பணிசார்ந்த சிக்கல்கள் காரணமாக அந்தப் பொருள்கள் அவரிடம் ஒப்படைக்கப்படாமலேயே இருந்து வந்ததாக ஜொகூர் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ முகம்மட் காலிட் காதர் தெரிவித்தார்.

சுமார் 50 வயதுடைய எம். சந்தோச சிங்கம் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவருக்குச் சொந்தமான நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவை திரும்ப அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அரசு விசாரணை அதிகாரிடமிருந்து தங்களுக்கு கடிதம் கிடைத்திருப்பதாக டத்தோ முகம்மட் காலிட் சொன்னார்.

ஓய்வுபெற்ற ஆசிரியரான சந்தோச சிங்கமும் அவரது வளர்ப்புத் தங்கையும் நிதி முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு 5 நாள் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.

எனினும், பின்னர் நீதிமன்ற வழக்கின் போது அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 லட்சம் ரிங்கிட் ரொக்கம் மற்றும் நகைகளை அவரிடமே ஒப்படைக்க ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக டத்தோ முகம்மட் காலிட் சொன்னார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker