Latestஉலகம்

தமிழின அழிப்பின் சாட்சி: மேரி கோல்வினை கொன்றது சிரியா அரசே! -அமெரிக்கா நீதிமன்றம்

வாஷிங்டன்,பிப்.3- தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதிப் போர் இன அழிப்பின் முக்கிய சாட்சிகளில் ஒருவருமான மேரி கோல்வின் என்ற பிரபல போர் ஊடகவியலாளரின் மரணம் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது,

மேரி கோல்வின்னின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட “எ பிரைவெட் வார்” என்ற திரைப்படம் அண்மையில் வெளிவந்து வேற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது

பத்திரிகையாளர் மேரி கோல்வின் கொலைக்கு சிரியாவின் பசார் அல் அசாத் அரசாங்கமே காரணமென அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சிரியா அரசாங்கம், பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதற்காகவும் தனக்கு எதிரான எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காகவும் திட்டமிட்டு பத்திரிகையாளர்களை இலக்கு வைத்தது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் என்பதால் மேரி கோல்வின் முக்கியமாக குறி வைக்கப்பட்டார். சிரியாவில் எதிர்ப்பு உணர்வுகள் அதிகரித்து வருகின்றன எனச் செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு செல்பவர்கள் மௌனம் ஆக்குவதற்காகவே மேரி கோல்வின் கொல்லப்பட்டார் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

போர்க் களங்கள் குறித்தும் புத்தகங்கள் குறித்தும் நாங்கள் அறிந்து கொள்தவற்கான முக்கியமான பங்களிக்கை செய்த பத்திரிகையாளர் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டது மிகவும் மூர்க்கத்தனமான செயல் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேரி கோல்வின் 2012ஆம் ஆண்டு சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அவரின் தற்காலிக ஊடக நிலையத்தின் மீது நடத்தப் பட்ட எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தமிழீழப் போரின் போது போர்ச் செய்திகளை நேரடியாக உலகுக் கொண்டு சென்ற பெருமைக்கு உரியவர் மேரி கோல்வின். மேலும் இறுதிக் கட்டப் போரின் போது நடந்த இன அழிப்பு அநீதிகள் குறித்த நேரடிச் சாட்சியாகவும் அவர் விளங்கினார்.

மேலும் தமிழீழப் போரின் போது அங்கு செய்தி திரட்டுவதில் ஈடுபட்டிருந்த மேரி கோல்வின், சிங்கள இராணுவத் தாக்குதலில் ஒரு  கண்ணை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker