Latestமலேசியா

ஒருவருக்கு ஒருவர் சர்ச்சை: பக்காத்தானில் விரிசல் வரும்! -ஆய்வுத் தகவல்

கோலாலம்பூர், பிப்.4-  முரண்பாடான கொள்கைகள் மற்றும் ஒருவரை ஒருவர் குறைக் கூறி சர்ச்சை செய்யும் போக்கு  ஆகியவற்றினால், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான  காலப்போக்கில் மேலும் விரிசல் அடையும் என்று ‘ஃபிட்ச் சொலூஸன்ஸ் மெக்ரோ ரீசர்ச்’ என்ற ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலில் வெற்றியடைவதற்காக, ஒன்றாக இணைந்த அந்நான்கு கட்சிகளும்  வெவ்வேறான கொள்கைகள் கொண்டிருப்பதால், அவர்களுக்கு இடையில் மனக் கசப்பு மிகுந்து வருகிறது என்று அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரிபூமி கட்சியானது பூமிபுத்ராவின் நலனில் தீவிரம் காட்டி வரும் வேளையில், அமானா கட்சி தன்னை இஸ்லாமிய கட்சியாக பிரகடனப் படுத்தி வருகிறது. இவ்வேளையில், பிகேஆர் கட்சி பல்லினத்தவர்களின் நலனில் அக்கறை காட்டி வந்தாலும், அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் மலாய் இனத்தவர்களே.

ஜசெக கட்சியில் சீனர்களின் எண்ணிக்கை தான் பெரும்பான்மையாக உள்ளது என்பதை அந்நிறுவனம் சுட்டிக் காட்டியது.

தேசிய முன்னணி கூட்டணியை தோற்கடிப்பதற்காக அமைக்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை எதிர்க்க விரோதிகள் யாரும் இல்லாமலேயே, அக்கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்சனைகள் எழுந்துள்ளன.  அதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான உறவில் நிச்சயம் விரிசல் ஏற்படும்” என்று ஆய்வு கூறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker