Latestவிளையாட்டு

கால்பந்து வீரருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்பு!

பாரிஸ், பிப். 4- பிரான்சின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவை ஏற்றிக்கொண்டு செல்லும் போது மாயமான விமானம் கண்டுப் பிடிக்கப் பட்டுள்ளது.

குட்டி விமானம் மூலம் ஜனவரி 21 ஆம் தேதி பிரான்சின் நன்டேஸ் பகுதியில் இருந்து வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நோக்கி கால்பந்து வீரர் எமிலியானோ சாலா மற்றும் விமானமோட்டி ஆகிய இருவர் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தனர்.

மலேசியக் கோடீஸ்வரர் டான்ஶ்ரீ வின்செண்ட் டானுக்குச் சொந்தமான இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்துக் குழுவான கார்டிப் குழுவுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதல் பயிற்சியில் பங்கேற்பதற்காக எமிலியோனா சாலா அந்த விமானத்தில் வந்து கொண்டிருந்த போது தான் அது காணாமல் போனது.

திடீரென விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து விரைந்து சென்ற அதிகாரிகள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர். இதில் எமிலியானோவுடன் சேர்ந்து 59 வயதான விமான ஓட்டி டேவிட் இபோட்சனும் மாயமானர்.

இந்நிலையில், சரியாக இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தேடுதல் வேட்டை நடத்திய 2 கப்பல்கள், காணாமல் போன அந்த விமானத்தை கண்டு பிடித்து விட்டதாக செய்திகள் கூறின.

இதனை அவருடைய குடும்பத்திற்கும் அதிகாரிகள் தெரியப்படுத்தி உள்ளனர். மேலும் அந்தக் கால்பந்து வீரரும் மற்றும் விமான ஓட்டியும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker