Latestஉலகம்

சொந்த முகநூலுக்கு மூடுவிழா செய்தார் ஏஞ்சலா மெர்க்கல்!

பெர்லின், பிப்.4- ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தம்மை முகநூலி பின்பற்றி வந்த லட்சக் கணக்கான ஆதரவாளர்களிடமும் பிரியா விடைபெறுவதாக அறிவித்தார். அவர் அரசியலில் இருந்து விரைவில் ஒதுங்கப் போகிறார் என்ற ஆரூடம் இதானால் வலுப்பெற்றுள்ளது.

“தான் இனிமேல் ஆளும் சிடியு கட்சியின் தலைவர் அல்ல என்றும் ஆர்வமுள்ளவர்கள் வேறு தளங்களில் இன்னும் தம்மை தொடர்ந்து பின்தொடர முடியும் என்றும் கூறியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தப் போவதாகவும், இதுவரை தனக்கு ஆதரவு அளித்து வந்தவர்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

“”நான் சிடியு கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிக்க முடியாத காரணத்தால் எனது பேஸ்புக் பக்கத்தை பயன்பாட்டை நிறுத்தப் போகிறேன்.

ஆனால், என் வேலையை தொடர நான் விரும்புகிறேன். பிரதமராக வேலை செய்கிறேன். நீங்கள் மத்திய அரசாங்க அகப்பக்கத்தில் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை பின் தொடர முடியும்.

மெர்க்கலின் முகநூல் பக்கத்தினை 2.5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். மெர்க்கல் தனது பிரதமர் பணிக் காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் 2021 ஆம் ஆண்டில் முடிவடையும் பதவிக் கால முழுத் தவணையையும் அவர் முடிப்பாரா, அல்லது பாதியிலேயே விலகுவாரா? என்பது தெளிவாக தெரியவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker