Latestஉலகம்

தாய் டயானா இழந்த பின் அடக்கி வைத்த உணர்ச்சிகள்! -இளவரசர் ஹர்ரி

லண்டன், பிப் 4- இளவரசி டயானா விபத்தில் சிக்கி இறந்த சமயம் அவருடைய உடலை வாங்க நானும் வருகிறேன் என கூறி ஹர்ரி தனது தந்தை சார்லஸிடம் கூறிய போது அவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிரிட்டன் இளவரசர் சார்லஸை திருமணம் செய்து கொண்ட டயானாவிற்கு வில்லியம்- ஹர்ரி என்ற இரு குழந்தைகள். 1996 ஆம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்து சென்ற டயானா ஆகஸ்ட் 31இல் 1997 ஆம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் டோடி பாய்டு, டிரைவர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஹென்றி பால் ஆகியோரும் உயிரிழந்தனர். அச்சமயம் இளவரசர் சார்லஸ் தன்னுடைய இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு அரசியாருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

டயானா இறந்ததைக் கேள்விப்பட்ட இளவரசர் ஹர்ரி நானும் அம்மாவின் உடலை வாங்க பாரிஸ் வரலாமா? எனக் கேட்டுள்ளார். ஆனால் இளவரசர் சார்லஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் ஆவணப்படம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டயானாவின் செய்தியாளரும் நண்பருமான ரிச்சர்ட் கே, இறந்து போன டயானாவின் உடலை கொண்டு வர பாரிஸுக்கு போவதாக சார்லஸ் முடிவு செய்தார்.

அது ஒரு ஆச்சரியமான மற்றும் தைரியமான நடவடிக்கை. அவர் அப்போது ஒரு முன்னாள் கணவர். தனது இரு மகன்களுக்கு தந்தை என்பதை தவிர வேறு எந்த உரிமையும் அப்போது அவருக்கு இல்லை.

சார்லஸ் அரச விமானம் மூலம் பாரிஸ் செல்ல விரும்பினார். ஆனால் அரசியார் அனுமதிக்கவில்லை. சார்லஸ் தனது வாழ்நாளில் அவருக்கு போராடியதை விட டயானாவுக்காக கடினமாக போராடினார். அரசியார் அரை மனதுடன் சம்மதித்தார்.

ஹர்ரி எப்பொழுமே டயானாவின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தவர். டயானா மீது அதிக பிரியம் கொண்டவர். தன்னுடைய தாயின் இழப்பினால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளானது குறித்து பேசியிருக்கிறார் ஹர்ரி.

12 வயதில் என் அம்மாவை இழந்தேன். கடந்த 20 ஆண்டுகளாக என் உணர்ச்சிகள் எல்லாம் அது அடக்கி விட்டது. எனது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல. என்னுடைய வேலைகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும் என இளவரசர் ஹர்ரி கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker