Latestமலேசியா

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்கள்; 2 வெளிநாட்டவர்கள் கைது!

சுங்கை பூலோ, பிப்.4 – கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதியன்று தேசா கோல்ஃபீல்ட்ஸ் எஸ்டேட் வீடமைப்பு பகுதியிலுள்ள ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இரு மனித உடல்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக 2 வெளிநாட்டு ஆடவர்கள் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில், 35 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்ட அவ்விரு ஆடவர்களும் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டனர் என்று சுங்கை பூலோ போலீஸ் தலைவர் சூப்ரீண்ட் ஷஃபாஹதோன் அபு பகார் கூறினார்.

அந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவுவதற்காக, அவ்விருவரும் 6-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்ட அவ்விரு உடல்களில் ஒன்று ஆணின் உடல் என்றும், மற்றொன்று பெண்ணின் உடல் என்றும் கூறிய அவர், கொலைச் செய்யப்பட்டவர்கள் யார் என்பதை இதுவரை கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker