Latestஉலகம்

ஐக்கிய அரபு சிற்றரசுக்கு போப். வரலாற்றுப்பூர்வ வருகை!

அபுதாபி, பிப்.5- போப்பாண்டவர் வரலாற்றில் முதல் முறையாக அரpu நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.  உலகத்திலுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவராக விளங்கும் போப்பாண்டவர் யாரும் இதுவரை அரபு நாடுகளுக்கு பயணம் செய்ததில்லை.

இந்நிலையில் ரோம் நகரிலிருந்து புறப்பட்டு அபுதாபிக்கு போப் பிரான்சிஸ் சென்ற போது ஐக்கிய அரபு சிற்றரசின் வெளியுறவு அமைச்சர் அன்வார் கர்காஷ் சிறப்பு வரவேற்பு அளித்தார்.

இன்று நடைபெறும் மத நல்லிணக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போப் நாளை சயேத் விளையாட்டு அரங்கில் சிறப்பு திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.

இந்நிலையில் அபுதாபி, இளவரசர் ஷேக் முகமது பின் சயத் அல் நயான் மற்றும் தமது நண்பரும் சகோதருமான எகிப்து முஸ்லிம்களின் தலைவரான ஷேக் அகமது அல் தயேப் ஆகியோரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்து உள்ளதாக போப் தெரிவித்துள்ளார்.

போப்பின் வருகை குறித்து அன்வார் கர்காஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், போப் வருகையால் மனித குலத்தின் மதிப்பு இங்கு வருகை புரிந்துள்ளது. உலக வரலாற்றில் சகோதரத்துவம், சகிப்புத் தன்மையில் ஐக்கிய அரபு சிற்றரசு புதிய அத்தியாயம் படைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker