Latestமலேசியா

ஜோ லோவைப் பிடிக்க உதவினால் பரிசு! -ஐஜிபி

ஷா ஆலம், பிப்.5- தலைமறைவாக இருந்து வரும் தொழிலதிபர் ஜோ லோவை கைது செய்ய உதவக்கூடிய வகையில் தகவல் தருவோருக்கு வெகுமதி தரப்படும் சாத்தியம் இருப்பதாக மலேசியப் போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகம்மட் ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

இந்த வெகுமதி ரொக்கமானதா? அல்லது வேறுவகை ஊக்குவிப்பா? என்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படலாம் என்று அவர் சொன்னார்.

1எம்டிபி நிதிமுறைகேடு தொடர்பாக மலேசிய போலீசாரால் தேடப்பட்டு வரும் ஜோ லோவைப் பிடிக்க, போலீசார் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

அதேவேளையில், அவரை பிடிக்க ஊக்குவிப்புத் தர முன்வரும் இதர தரப்புக்களின் உதவியையும் போலீசார் வரவேற்பர் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker