Latestவாழ்க்கை

தலைவலி தரும் அவஸ்தையா? – அந்த உணவுகள் வேண்டாமே…!

கோலாலம்பூர், பிப். 6- பெரும்பாலானவர்கள் தலைவலியால் அவதிப்படுவதுண்டு. மன அழுத்தம் அதிக வேலை கோபம் உட்பட பல காரணங்கள் தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்,

ஒரு சிலருக்கு அதிகம் பசித்தாலும் தலைவலி வரும். துர்நாற்றம் போன்றவற்றால் கூட தலைவலி ஏற்படுவதுண்டு. அந்நேரத்தில் எவ்வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

>> தலைவலி என்றதுமே சட்டென நினைவுக்கு வருவது காப்பி தான். ஆனால் சில நேரங்களில் இது தலைவலியை அதிகரிக்கவே செய்கிறது.

>> இது தவிர சீஸ் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்களும் தலைவலியை அதிகரிக்கும்.

>>மது அருந்தும் நபர்களுக்கு 29 முதல் 36% விழுக்காடு வரையிலானவர்களுக்கு ஒற்றை தலைவலி பாதிப்பு உள்ளது.

>>செயற்கை இனிப்புகளும் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகின்றன. மேலும் வைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட சிட்ரஸ் பழங்களும் தலைவலியை உண்டாக்கும்.

சுமார் 2 முதல் 22 % வரையிலானவர்களுக்கு ‘டார்க் சாக்லேட்’ தலைவலி பிரச்சனை ஏற்படுத்துகிறது. கோதுமை- பார்லி போன்ற தானியங்கள் அதிகம் உட்கொண்டாலும் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker