Latestமலேசியா

தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட பெண்!

ஜோர்ஜ் டவுன்,பிப்.7- மனநோய்க்கு ஆளாகி இருந்ததாக கூறப்படும் பெண்மணி ஒருவர், ஜாலான் ஆயெர் ஈத்தாமில் தான் தங்கியிருந்த அரசாங்க குடியிருப்பில் தன்னைத் தானே கொண்ட சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.

நேற்று காலை 11.30 மணி அளவில் நிகந்த அச்சம்பவத்தில், 30 வயதான அந்தப் பெண்ணுக்கு 40 விழுக்காட்டுத் தீப்புண் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

தன்னைத் தானே எரியூட்டிக் கொள்வதற்கு முன்னதாக அவர் கத்தியால் வெட்டி தனது உடம்பைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சம்பவம் நிகழ்ந்த வீட்டில் தான் அவரது தாயாரும், இளைய சகோதரரும் வாழ்ந்து வருகிறார்கள். எனினும், சம்பவத்தின்போது அவர்கள் யாரும் வீட்டில் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரன் ஏதேச்சையாக அவர்களைக் காண வீட்டுக்குச் சென்றிருந்தபோது. தனது சகோதரி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். அவர் உடனடியாக போலீசையும் தீயணைப்பு படையினரையும் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்திருக்கிறார்.

எனினும், ஆம்புலன்சுக்கு காத்திருக்கும் வேளையில், அந்தப் பெண் வீட்டுக்கு வெளியே ஓடிச் சென்று பெட்ரோலை ஊற்றி தீயைப் பற்ற வைத்திருக்கிறார். சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விட்ட வேளை, அந்தப் பெண்ணின் மூத்த சகோதரரும் உடனிருந்து தனது தங்கைக்கு முதலுதவி வழங்கியிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker