Latestமலேசியா

“தாபோங் ஹராப்பான்”: மொத்த வசூல் ரிம.202 மில்லியன்!

புத்ராஜெயா,பிப்.7- நாட்டின் கடன் சுமையைத் தீர்க்க மக்களின் பங்களிப்பை வழங்க அறிமுகப்படுத்தப்பட்ட ‘தாபோங் ஹராப்பான்’ நிதித் திட்டம் ஜனவரி 14-ஆம் தேதியோடு நிறுத்தப்பட்ட வேளை, அத்திட்டத்தின் வாயிலாக மொத்தம் 202 மில்லியன் ரிங்கிட் நிதி கிடைத்துள்ளது.

தொடக்கத்தில், தாபோங் ஹராப்பான் திட்டம் கடந்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதியோடு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், மக்கள் பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அத்திட்டம் இவ்வாண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

ஜனவரி 14-ஆம் தேதிக்கு பிறகு மக்கள் வழங்கிய நன்கொடை கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாது. அந்நிதி உரியவர்களிடமே திரும்பி வழங்கப்படும் என்றார் அவர்.

இவ்வேளையில், நாட்டின் கடனை அடைப்பதற்காக அரசாங்கத்திற்கு உதவும் பொருட்டு நன்கொடை வழங்கிய அனைத்து மலேசியர்களுக்கும் அமைச்சர் அரசாங்கத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker