
புத்ராஜெயா,பிப்.7- பிரிசிண்ட் 18-இல் வழக்கம் போல குப்பைகளை எடுக்கச் சென்றிருந்த துப்புரவு பணியாளர் ஒருவர் இன்று காலையில் ஓர் அதிர்ச்சிக் காட்சியைக் கண்டிருக்கிறார்.
குப்பை லோரியில் குப்பைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தபோது, அந்தக் குப்பை லோரியில் கைக்குழந்தையின் சடலம் ஒன்று குப்பைகளோடு இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ந்து போயிருக்கிறார்.
தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் அக்குழந்தை இருந்திருக்கிறது.
பிறந்த குழந்தையை போர்வைக்குள் சுற்றி, முகத்தை குளிக்கும் துண்டால் மூடி, குப்பையோடு குப்பையாக சேர்த்து வீசிய கொடூரர்கள் யார் என்று தெரியவில்லை.
குழந்தையில் சடலம் சவப் பரிசோதனைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லி ஹசான் தெரிவித்துள்ளார்.