Latestமலேசியா

நஜிப்பிடம் பணம் பெற்றோமா? விசாரணையை சந்திக்கத் தயார்! -பாஸ்

கோலாலம்பூர், பிப்7- பாஸ் கட்சி தலைவர்கள் 1எம்டிபியிலிருந்து வெளியான குற்றச்சாட்டுகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மேற்கொள்ளும் புலன் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோம் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் கூறினார்.

பாஸ் கட்சி பணம் பெற்றதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று நாங்கள் நிருபிப்போம் எம்.ஏ.சி.சியிடம் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைப்போம் என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பில், பாஸ் கட்சியினர் சிலர் விசாரணைக்கு விரைவில் அழைக்கப் படுவார்கள் நேற்று எம்.ஏ.சி.சி தெரிவித்திருந்தது.
முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பாஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 90 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றனர் என சரவாக் ரிப்போர்ட் எனப்படும் ஊடகம் 2017ஆம் ஆண்டில் அம்பலப்படுத்தியது.

இந்நிலையில் சரவாக் ரிப்போர்ட் ஊடகத்தின் மீது அவதூறு மற்றும் நஷ்ட வழக்கு தொடுத்த பாஸ் தலைவர் ஹாடி அவாங், சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கு சமரசம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker