Latestமலேசியாவிளையாட்டு

நமது பாராலிம்பிக் நாயகன் ரிட்சுவானுக்கு சிறந்த ஆசிய விளையாட்டு வீரர் விருது!

கோலாலம்பூர்,பிப்.7- 2018-ஆம் ஆண்டின் சிறந்த ஆசிய விளையாட்டு வீரர் விருதைப் பெற்றௌ நமது தேசிய பாராலிம்பிக் வீரர், முகமட் ரிட்சுவான் முகமட் புஸி வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஆசியாவில் உள்ள திறமையான வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் உன்னத நோக்கத்தில் ஆசிய பாராலிம்பிக் செயற்குழு ஏற்பாட்டிலான இவ்விருது விழாவில், ரிட்சுவானுக்கு இந்த அங்கீகாரம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நேற்று அரபு சிற்றரசில் நடைபெற்ற இந்த விருது விழாவில், ரிட்சுவான் விருதைப் பெற்றுக் கொண்டார்.

இந்த விருதை தான் பெறுவதற்கு ஊன்றுகோலாக இருந்த தனது பெற்றோர், பயிற்றுநர் ஆர்.ஜெகநாதன் உட்பட தேசிய விளையாட்டு மன்றத்துக்கும் மலேசிய பாராலிம்பிக் மன்றத்துக்கும் ரிட்சுவான் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கடந்தாண்ட்ய் அக்டோபரில் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், அவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவில் உலகச் சாதனையையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிச் சாதனையையும் முறியடித்தார். அதுமட்டுமின்றி அதே போட்டியில், 400 மீட்டர் பந்தயத்திலும் நீளம் தாண்டுதலிலும் மேலும் இரு தங்கங்களை வென்றார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 2016-ஆம் ஆண்டில் பிரேசிலில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று உலக அரங்கில் சாதனை படைத்தான் ரிட்சுவான்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker