Latestமலேசியா

சீபீல்ட் ஆலய பணிக் குழு விண்ணப்பம்: நீதிமன்றம் நிராகரிப்பு!

ஷா ஆலாம், பிப்.8- தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணம் குறித்த விசாரணையில் பங்கெடுத்துக் கொள்வதற்காக சீபீல்ட் ஆலய பணிக்குழு மற்றும் ஆலய பக்தர்கள் தொடுத்த விண்ணப்பங்களை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

அவ்விரு தரப்பினரும் அந்த மரண விசாரணையில் பங்கெடுத்துக் கொள்வதற்கான முக்கிய அம்சங்களை கொண்டிருக்கவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் கரிம் ரஹ்மான் சொன்னார்.

அந்த ஆலயத்தின் நில விவகாரம் தொடர்பில், நில உரிமையாளருக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையிலான பிரச்சனையை சமாளிப்பதற்காகதான் அந்தப் பணிக்குழு அந்தக் கலவரத்தின் போது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டி, அப்பணிக்குழுவின் விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார் என்று வழக்கறிஞர் எம்.விஸ்வநாதன் கூறினார்.

“இன்று விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து நாங்கள் விண்ணப்பம் செய்வோம். இங்கு நீதி கேள்விக்கு உட்படுத்தப் பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த மரண விசாரணையில் பங்கெடுத்துக் கொள்ளும் பணிக்குழுவின் விருப்பத்தை சட்டத்துறை தலைவர் அலுவலகம் மற்றும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைப்பு எதிர்த்து வருவது வருத்தத்திற்குரிய விஷயமாகும் என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.

“இந்த வழக்கு வெளிப்படையாக நடத்தப் படாது என்பது இன்றைய தீர்ப்பின் வாயிலாக நன்றாக தெரிய வந்துள்ளது” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker