Latestமலேசியா

ஈப்போ-சென்னைக்கும் இடையே நேரடி விமான சேவை- பேரா மந்திரி புசார் அறிவிப்பு

ஈப்போ,பிப்.8- பேராவில் ஈப்போவிற்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவையை வழங்க மாநில அரசு திட்டம் மேற்கொண்டுள்ளதாகவும்,

அது தொடர்பாக முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் கூறினார்.

அண்மையில் தென் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதாகவும், இரு நாடுகளுக்கான உறவை மேலும் வலுப்படுத்த இந்த திட்டம் வழி வகுக்கும் என்றார் அவர்.

ஈப்போவில உள்ள பிரபல ஹோட்டலில் சீன வத்தக சங்கம் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் ஆற்றிய உரையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

முன்னதாக பேசிய அவர் , ஈப்போவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமானச் சேவை அடுத்த மாதம் தொடங்கும் என்பதனையும் தெரிவித்தார்.

ஈப்போவில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் ஈப்போ- ஜோகூர்- சிங்கப்பூருக்கும் இடையே விமானச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையத்தில் விமானங்கள் தங்கு தடையின்றி இறங்குவதற்கான அதன் ஓடும் தளத்தை மேம்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், பேராவில் அனைத்துலக விமான நிலையத்தை உருவாக்க பரிந்தரையை மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக அமாட் பைசால் தெரிவித்தார் .

பேரா மாநிலத்தை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகிறது.

மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள மூன்றாவது கார் திட்டம் தஞ்சோங் மாலிமில் உருவாக்கப்படும் என்ற தகவலையும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker