Latestமலேசியா

நஜிப் மீது மீண்டும் அதே 3 குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர்,பிப்.8- 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி இண்டர்நெஷனலில் இருந்து 42 மில்லியன் ரிங்கிட் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பில் மீண்டும் அவர் மீது 3 குற்றச்சாட்டுகள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாய்ந்துள்ளன.

மாறாக, அம்மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்தும் நஜிப்பை நேற்றுதான் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுவித்தது.

இன்று நீதிமன்றத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, நஜிப் அக்குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

2014-ஆம் ஆண்டு, ஜூலை 8-ஆம் தேதி ஜாலான் ராஜா சுலானில் அமைந்துள்ள அம்இஸ்லாமிக் வங்கிக் கணக்கில் அந்த 47 மில்லியன் ரிங்கிட்டை ஊழலாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் 5 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 5 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker