Latestமலேசியா

‘எங்களுக்கு தந்த நிலத்தை பறிக்காதீர்கள்!’ -அரசுக்கு மக்கள் கோரிக்கை -(Video)

ஈப்போ, பிப்.9-  புந்தோங்  பகுதி புறம்போக்கு நிலத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தவர்கள், வீடு கட்டிக் கொள்ள  ஒதுக்கப்பட்ட ‘பத்துகாஜா பெம்பான் நிலத்தைப் பறிக்க வேண்டாம். தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மறுகுடியேற்றத் திட்டத்தின் வழி  சொந்த நிலத்தில் வீடுகட்டிக் கொண்டு வாழலாம் என 133 இந்தியக் குடும்பங்கள் கொண்டிருந்த  கனவைத் தகர்க்கும் வகையில் நிலத் திட்டத்தை அரசாங்கம் ரத்து செய்து விட்டு அடுக்குமாடி வீடு கட்டித் தரப் படவிருப்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு, பெம்பானில் 145 ஏக்கர் நில ஒதுக்கீட்டை தேசிய முன்னணி அரசாங்கம் செய்தது. அந்த நிலத்தை சீர் செய்ய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வெ. 50 லட்சம் வழங்கினார் .

இப்போது அந்த நிலச் சீரமைப்புப் பணிகளும் முடிந்து விட்ட நிலையில் புதிய அரசாங்கம், அந்த நிலத்தை தங்களிடமிருந்து  பறிக்கக்கூடாது என்று பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே கம்போங் செக்கடி மக்களுக்கு பெம்பான் பகுதியில் நிலம் வழங்குவதாக நில அலுவலகம் உறுதிக் கடிதங்களை வழங்கியுள்ளது.  அதற்கான  ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்குரிய கட்டணங்களும் நில அலுவலகத்தால் பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்று கம்போங் செக்கடி மஇகா கிளைத் தலைவரான பெ.பாலையா நினைவுகூர்ந்தார்.

இந்நிலையில், எந்தக் காரணம் கொண்டும் அந்த நிலத் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது. மக்களுக்கு ஆவண ரீதியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாலையா கோரிக்கை விடுத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker