Latestமலேசியா

நீர்வீழ்ச்சியில் இரு இந்திய இளைஞர்கள் மூழ்கி மரணம்!

ஈப்போ,பிப்.9- ஈப்போ, சிலிபின் நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்ற இந்திய இளைஞர் இருவர் நேற்றிரவு 7.30 மணிக்கு பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

24 வயது கே.குகனேஸ்வரனும், அவரது உறவினரான மற்றோர் 20 வயது இளைஞர் வி.விக்னேஸ்வரனும் எழுவர் அடங்கிய தங்களின் குடும்பத்தாருடன் தான் அந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றிருக்கிறார்கள்.

எனினும், குளித்துக் கொண்டிருந்த அவ்விருவரையும் திடீரென காணவில்லை என்று குடும்பத்தார் மாலை 4.36 மணி அளவில் மேரு ஜெயா தீயணைப்பு மீட்பு நிலையத்தை தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

சம்பவ இடத்தை வந்தடைந்த தீயணைப்பு படையினர் உடனடியாக இரு இளைஞர்களையும் தேடும் முயற்சியில் களமிறங்கினர். அந்த இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் இடம் மிகவும் செங்குத்தான பகுதியாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர்.

எனினும், கடும் சிரமத்திற்கு பிறகு, அந்த இருவரின் சடலங்களையும் இரண்டு மீட்டர் ஆழத்திற்கு அடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டுக் கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், குகனேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் சடலங்கள் சவப்பரிசோதனைக்காக ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker