Latestஇந்தியா

லண்டன் ‘SOAS’ பல்கலை.யில் தமிழ்த் துறை: சாதிக்க காத்திருக்கும் கனகலெட்சுமி!

சென்னை, பிப்.9- சென்னையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை லண்டன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

சென்னை செனாய் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கனகலட்சுமி தமிழ்க் கற்பிக்கும் முறைகளைப் புதிது புதிதாக உருவாக்கி வருபவர்.

இவர் லண்டன் பல்கலைக் கழகத்தில் ‘SOAS’ கல்லூரியில் நிறுவப்படும் தமிழ்த் துறையின் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இது குறித்து கனகலட்சுமி கூறுகையில், இந்த வாய்ப்பு அதிக மகிழ்ச்சியையும் பொறுப்பையும் தருகிறது. என்னுடைய பணி, லண்டன் சென்று தமிழ் வளர்ச்சி சார்ந்த விஷங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே என்று குறிப்பிட்டார்.

மேலும் தமிழ் மொழி கற்பித்தலில் ஆர்வமும் திறனும் உள்ள ஆசிரியர்களை அந்த அமைப்புக்கு ஒருங்கிணைக்கும் பணியையும் செய்யவேண்டும். அங்கு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ச் சார்ந்த ஆய்வுப் பணிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker