Latestமலேசியா

ஆடம்பர மோட்டார் சைக்கிளில் ஹாடி அவாங்கின் மகன்! பணம் வந்தது எப்படி? -சர்ச்சை

கோலாலம்பூர், பிப்.10- பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் தலைவர் ஹாடி அவாங்கின் மகன், விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்தவாறு போஸ் கொடுக்கும் படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் நஜிப், 1எம்டிபி நிதியில் இருந்து பாஸ் கட்சித் தலைவர்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் பணம் தந்ததாகவும் அந்தப் பணத்தில் அவர்கள் ஆடம்பரமான வாகனங்கள், சொத்துக்கள் வாங்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இந்தப்படம் வெளியாகி இருக்கிறது.

பிஎம்டபள்யூ மோட்டார் சைக்கிளான இதன் விலை ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரிங்கிட் என்று கூறப்பட்டது. நஜிப்பிடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்தில் பாஸ் தலைவர்கள் சிலார் ஆடம்பரக் கார்களையும் பங்களாக்களையும் வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இந்நிலையில் தாம் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தில் இருக்கும் மோட்டார் சைக்கிள் தன்னுடையது அல்ல என்று பாஸ் தலைவர் ஹாடி அவாங்கின் மகனும் கட்சி இளைஞரணித் தலைவருமான முகம்மட் காலில் அப்துல் ஹாடி மறுத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker