Latestமலேசியா

ஈப்போ நகரத்தார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேக விழா!

ஈப்போ, பிப் . 11- சுமார் நூற்றுப் பத்தாண்டு காலப் பழமை வாய்ந்த ஈப்போ நாட்டுக்கோட்டை நகரத்தார் அருள் மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய மகா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

கடந்த 1904 ஆம் ஆண்டு கட்டத் துவங்கிய இந்த ஆலயத்தின் முதல் நன்னீராட்டு விழா 1908 ஆம் நடைபெற்றது.

இன்று இங்கு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் பெரும் திரளானோர் கலந்துக்கொண்டனர் . தமிழகம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் முனைவர் கே. பிச்சைக் குருக்கள் தலைமையில் இக்கும்பாபிஷேக விழா நடந்தது.

மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், பத்துகாஜா நாடாளுமன்ற வி. சிவக்குமார் , தோ புவான் இந்திராணி சாமிவேலு உட்பட பலர் வருகை புரிந்தனர்.

பேரா மாநிலத்தில் வரலாற்றுப் பூர்வ ஆலயமாக விளங்கும் இந்த ஆலயம் சமய வளச்சிக்காக மட்டும் பாடுபடவில்லை மாறாக, தமிழ் மொழியைக் காக்க ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தில் தமிழ்ப்பள்ளிக் கூடத்தை உருவாக்கியது.

அதில் கல்வி கற்றோர் பலர் நாட்டில் பல்வேறு இடங்களில் சிறந்த தொழில் துறையில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker