Latestசினிமா

நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு: அதிர்கிறது திரையுலகம்!

ஐதராபாத், பிப். 10- தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவரது மகனும் நடிகருமான ராம் சரணுக்கு 1,300 கோடி ரூபாய்க்கும் கூடுதலான அளவில் சொத்துக்கள் இருப்பதாக வெளியான தகவலால் தெலுங்குப் பட உலகமும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சி பரவி இருக்கிறது.

கடந்த 2007-இல் சினிமாவில் அறிமுகமான ராம் சரண் “மகதீரா” படத்தில் நடித்து பிரபலமானார்.  அந்தப் படம் வசூலிலும் சாதனை படைக்க ராம்சரணுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது தெலுங்கு பட உலகின் முக்கிய நடிகராக இருக்கும் இவர் சிரஞ்சீவியும்- நயன்தாராவும் இணைந்து நடிக்கும் “சைரா நரசிம்ம ரெட்டி” என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாக வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் ஜூனியர் என்.டி,ஆருடன் இணைந்து நடித்து வரும் ராம் சரணின் சொத்து பட்டியல் வெளியானது.

சமீபத்தில் ஐதராபாத் ஜூப்ளி ஜில்ஸ் பகுதியில் புதிதாக கட்டியிருக்கும் வீட்டின் பதிப்பு 38 கோடி என கூறப்படுகிறது.  தெலுங்குப் படவுலகில் அதிகச்  சொத்துள்ள ஒரே நடிகர் ராம் சரண் என்றும் அவரது சொத்துப் பட்டியல் கேட்டு ஆந்திராவே வாய்ப் பிளக்கிறது என்று அவரது ரசிகர்கள் பெருமையோடு சொல்கின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker