உலகம்

பெண்மணியை உயிரோடு தின்றுவிட்ட வளர்ப்புப் பன்றிகள்! அதிர்ச்சிச் சம்பவம்

உட்முர்டியா,(ரஷ்யா), பிப்.10- ரஷ்யாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை, பன்றிக் கொட்டகையில் இருந்த பன்றிகள் ஒன்று சேர்ந்து உயிரோடு கடித்துத் தின்று தீர்த்து விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவின் உட்முர்டியா மாவட்டத்திலுள்ள மலோபர் கின்ஸ்கி என்ற ஊரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

திடீரென வலிப்பு ஏற்பட்டதால் 54 வயதுடைய அந்தப் பெண்மணி, பன்றிகள் வளர்க்கப்படும் கொட்டகைக்குள் தவறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த பன்றிகள் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளன. பின்னர் அவரது முகம், தோள்பட்டை, காதுகள் உள்பட உடலின் பல பாகங்களைக் கடித்துத் தின்றன என்று ரஷ்ய ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.

அன்றைய தினம், உடல்நிலை சரியில்லாததால் அவருடைய கணவர் முன் கூட்டியே உறங்கச் சென்று விட்ட நிலையில் , அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட அவலநிலை மறுநாள் காலையில் தான் அவருக்குத் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்த தடயவியல் நிபுணர்களின் ஆய்வு அவசியமாகிறது எனப் போலீசார் தெரிவித்தனர்.

மனிதனைப் பன்றிகள் தின்று விட்டதாக கூறப்படுவது குறித்து தங்களின் வாழ்நாளில் இதுவரை கேள்விப்பட்டிராத சம்பவம் என்று புலன் விசாரணை அதிகாரிகள் பலர் கருத்துரைத்துள்ளனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker