Latestசினிமா

ரஜினி மகள் திருமண வரவேற்பு: தனுஷ் எங்கப்பா ஆளையே காணோம்!

சென்னை பிப். 10- ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது மூத்த மகளின் கணவரும் நடிகருமான தனுஷ் இல்லாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா- விசாகனின் திருமணம் நாங்கு நாள் வைபவமாக நடக்கிறது. இந்நிலையில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில் முக்கிய விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வித்தியாசமான விதைப் பந்து பரிசாகக் கொடுத்து ரஜினி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளனர். ஆனால் அவற்றில் குடும்பப் போட்டோ உட்பட மேடையில் எடுக்கப்பட்ட எந்தப் புகைப்படத்திலும் தனுஷ் இல்லை. இதனால் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் அவர் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாக வந்ததாக சில புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகிவுள்ளன. குடும்பமே கொண்டாட்ட மனநிலையில் பளபளப்பாக ஆடையில் இருந்த அந்தப் புகைப்படங்களில் எளிமையான உடையில் இருக்கிறார் தனுஷ்.

தற்போது அவர் ‘அசுரன்’ படப்படிப்பில் மும்முரமாக இருப்பதால் அங்கிருந்து அப்படியே நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு அவ்வளவு பிசியாக நடித்து வருகிறார் தனுஷ் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

மேலும் ஏன் அவர் மணமக்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை அல்லது ஏன் அப்புகைப் படங்களை வெளியிடவில்லை என்று வலைத்தளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் தொடர்கின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker