Latestசினிமா

விக்ரமின் மகன் நடித்த ‘வர்மா’ படம்: விலகியது ஏன்? – இயக்குனர் பாலா

சென்னை, பிப்.10- நடிகர் விக்ரமின் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘வர்மா’ படமெடுத்து முடிக்கப் பட்டிருந்தாலும் அது வெளியிடப்படாது படநிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதிலிருந்து இருந்து விலகியது ஏன் என அதன் இயக்குனர் பாலா விளக்கமளித்தார்.

தயாரிப்பாளருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டுள்ளார். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்கத்தில், விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை கைவிடுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து டுவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால் படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால் இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன் என இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி, இது குறித்து மேலும் பேச விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிப்பாளருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டு அவர் விளக்கம் அளித்துள்ளார்,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker