Latestஉலகம்

வியட்னாமில் கிம் ஜோங்கை சந்திக்கிறார் டிரம்ப்!

வாஷிங்டன், பிப்.10- அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜோங் யுன் இருவரும் வியட்னாம் ஹனோய் நகரில் சந்தித்து பேசவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பும்- வடகொரியா தலைவர் கிம் ஜோங் யுன் இருவரும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உச்சநிலை மாநாட்டில் முதல் முறையாக சந்தித்து பேசினர்.

இந்தப் பேச்சு வார்த்தையின் போது கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக் கொண்டனர். இதையொட்டி ஓர் உடன்பாடும் செய்து கொண்டனர்.

ஆனாலும் இதில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான போதும் டிரம்புடன் வடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில், பிப். 27-29 தேதிகளில் வியட்னாம் தலைநகர் ஹனோயில் நகரில் கிம்மை சந்தித்து பேசவிருப்பதாக டிரம்ப் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

கொரிய தலைவர் கிம் ஜோங் யுன்னை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது அமைதிக்கான நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும் என்றார் அதிபர் டிரம்ப்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker